தவறும் தவறு....
தவறித் தவறிலே தொலைந்து
தவரில்லைஎன்று தன்னை தேற்றி
திரும்பத்திரும்ப தவறிலே தொலைகிறான்
தரம் தாழ்ந்து...
தொட்டில் கட்டி தானும் தவறில் தூங்கி
தோழனையும் தவறிலே தூங்கவிட்டு
தொலைத்த தன்னை தேடித்தேடி
தவறிலே தூங்கினான்...
தவறின் தாகத்தோடு
தவறைத் தாங்கிக்கொண்டு
தவறில் தங்கிக்கொண்டு
திருந்தத் தவறிக்கொண்டு ...
தன் தள்ளாத தருணத்திலே
தவறோடு தரைமன்னிலே
தான் திரும்பும் தருணத்திலே
துடித்துத் திருந்துவது தகுமோ....?