நம்பிக்கையோடு

பட்டம் பெற்றவர்களுக்கு 'வேலைவாய்ப்பு முகாம்.............. '

வேலை கிடைத்தது
முகாமில் முகாமிட்ட தேனிர் கடை காரனுக்கு...

விண்ணப்ப படிவங்கள் விற்பவனுக்கு...

கம்பி போட்ட பெரிய கதவோரம் நின்று
நோட்டீஸ் குடுப்பவனுக்கு...

சவரம் செய்த முகத்தோடு
கால்சட்டைக்குள் சட்டையை திணித்து
இடுப்பு பட்டையை மாட்டி
காலணிகள் அணிந்து
சலிக்காமல் சான்றிதழ் கோப்புகளை
சுமந்து வரும் பட்டம் பெற்றவனோ
கேள்விகனைகளை தாங்கும்
கேளிக்கை பொம்மையாய்.......

பதிவு பணம் நூறோ இருநூறோ
இழந்துவிட்டு
'கால் பண்றோம்' என்ற பழகி போன பதிலோடு
பதட்டமே இல்லாமல் அந்த
பத்து மாடி கட்டிடத்தின் படி இறங்குவான்...

நாளைக்கு வேற இண்டர்வியுல பாத்துக்கலாம்
என்ற நம்பிக்கையோடு..

~~தாகு

எழுதியவர் : தாகு (27-May-11, 5:08 pm)
சேர்த்தது :
பார்வை : 514

மேலே