சூரியப் பூக்கள் -ரகு

மழையும் மண்வாசமும்
சேர்ந்து குழைவதென
அனிச்சம் பூ
அழகே அடையாளம்
என்பதென
அரசாணி இலையின்
தவிர்க்கவியலா
பாம்போவியமென
நாண மகுடம்
சூடி இருக்கிறது
பெண் பாலினம்

ராணுவத் துப்பாக்கியின்
முனைக்கு
அவசியமில்லை எனினும்
தீவிரவாதம் ஒடுக்கிய
பேரமைதிக்குப் பின்னரேனும்
மென் பூக்கள் பூக்கக்கூடும்
சொட்டும் ஈரத்தில்
சட்டென உதிர்வதாய்

காற்றின் பலம்
கற்றுக் கொடுத்தத் தற்காப்பை
அதன் பலவீனம்
உடைத் தெரியுதெனில்
ஆச்சர்யம்
ஒன்றுமில்லை-அது
நாணத்தின்பால் என்க

சூழ்நிலை களையும்
நாண அழகை
சூடி இருக்காவிடினும்
உயிர் நரம்புகளில்
உயிர்த்திருக்கச் செய்யட்டும்
எப்போதும் யாரும்
சோதித்து விடாதீர்
சூரியப் பூக்களை......!!!

(தலைப்பிற்கு நன்றி நண்பர் திரு குமரேசன் கிருஷ்ணன் )

எழுதியவர் : சுஜய் ரகு (13-Sep-15, 5:11 pm)
பார்வை : 110

மேலே