இதயத்தை திருடிவிட்டால்

நான்கறை இதயத்திற்குள்
நயமுடன் நுழைந்தவளே!!

உன் கொஞ்சும் குரல் கேட்கையில்
நான் குழந்தை போல் மாறுவதேன்!!

கண்ணருகில் நீ இருந்தாலும்
உன்னை கவரத்தான் முடியலையே!!

ஊமை இல்லை நான் எங்கும்
உன் முன் ஊமை ஆவதேன்!!

தேவதைகள் பலர் இருந்தும்
உன்னை மிஞ்ச எவரும் இலர்!!

காத்து இருப்பேன் என் ஆயுள் வரை
என்னவளாய் நீ வரும் வரை!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (13-Sep-15, 10:20 pm)
பார்வை : 115

மேலே