பக்கம் நீ இருந்தால்

நடை பயின்ற காலம் முதல் நேற்றுவரை
தோழமையாய் இருந்தவளே!!
எவர் என்ன சொன்னாலும்
கவலை இல்லாது கடந்தோமே!!
என் கவலைகளை எல்லாமே
உன் முகம் கண்டு மறந்தேனே!!
இன்று மட்டும் ஏன் விலகி நின்றாய்
எனக்கு திருமணம் என்பதாலோ!!
நீ சொல்லித்தான் கரம் பிடித்தேன்
மனைவியென இவள் கரங்களை!!
உன்னிடம் சொல்லாது!!
நீ தான் என் தோழியென...
இவளிடம் சொல்லித்தான்!!
கரம் பிடித்தேனடி!!
..........................................................இருந்தும்???
திருநாள் வரும் நாள் எல்லாம் உனக்கென
புதுப் புடவை வாங்கித் தருவேனே!!
திருமணம் ஆனபின்னே
உனக்கென புதுப் புடவை வாங்க முடியலையே...
எப்படிச் சொல்வது உனக்குத் தான்
வாங்குகிறேன் என்பதனை
கோவித்துக் கொள்வாளே
என் குலமகள் என்பதனால்...
என் இரு கண்களில் ஒரு கண் விலகி நின்றால்
ஒரு கண் அழுதிடுமோ தெரியாது?
என் இதயம் அழுகிறதே!!
இருவருக்கும் என் உயிர் உண்டு
நீ மட்டும் விலகிச் செல்லாதே!!
என் பக்கம் நீ வேண்டும் தோழமை கொண்டவளே!!!