அருகதை
நீ வேறொருத்தி மீது காட்டும் அன்பினால்
எனக்கேற்படுவது ஏக்கமே
அதையும் நான் பெறவில்லையே என்று...
நீயோ அதற்க்கு பொறாமை பட்டம் சூட்டுகிறாய்
அது எதிர் வினை.... தீங்கு நினைக்கும்
எள்ளளவும் உன் மகிழ்ச்சி என்னால் குறையாது...
தாய் மகன் உறவில் மனைவி வந்தால் ஏற்படும்
மாற்றமே நம் உறவிலும்
இருபினும் தாயுள்ளம் தரம் குறையாது...
மாற்றத்தின் காரணம் வந்தவள் மீதே திணிக்கப்படுகிறது
நிதர்சனம் உன் மனமே மாறியது
அதை தெரிந்தும் ஏற்க மறுக்கிறாய்
அதை உனக்கு உரைக்கும் முயற்சி வீணே
இம்முறையும் தோற்றுத்தான் போனேன் உன்னிடம்
அவளை தொடர்ந்து நீ இருக்கிறாய்
இந்த இரண்டாம் தோல்வியை ஒருவாறு எதிர்கொண்டேன்
ஏனெனில் அவளிடம் உன்னை தோற்ற முதல் தோல்வி
அதை விட அதிக வேதனையை கொடுத்ததால்
இன்றும் என் ஏக்கத்தை புதைத்து
உனக்காகவே சிரிக்கிறேன்
என்றாவது இந்த பொறாமைக்காரி முழு அருகதை பெறுவேன் என்ற நம்பிக்கையில்..