திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்

பிறவி என்னும் பாதை -- அதில்
உனைத் தொடர்ந்து வந்தேன்!
இனியும் உன்னைத் தொடர்வேன்! -- என
உரிமை பேசும் தங்கை - அவள்
இன்றிப் பிறந்த ஆண்
ஏங்கும் அந்த உறவுதான்
தோழி என்னும் இனிய பெயர் கொள்
உடன் பிறவா சகோதரி!
இதற்கு
திருமணம் என்ன தடை?
தோழி அவள்
இருவரையும்
பிரிக்கும் சுவர் அல்ல!
இணைக்கும் பாலம்!

எழுதியவர் : ம கைலாஸ் (13-Sep-15, 11:19 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 136

மேலே