என் அன்புத் தோழியே
என் அன்புத் தோழியே...
நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!
நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!
என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..
அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!
என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
கல்வியாக வந்த கலைமகள் நீ...!!!
தித்திக்கும் திருமகள் நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவள் நீ...!!!
பால்வண்ண நிலவை
பாற்கடலில் கரைத்து
பெண் வடிவம் உரித்து
பிறந்தவள் நீ...!!!
துடித்துத் துவளும்
இதயத்தை இதமாக்கிய
இனியவள் நீ...!!!
மணத்தால் மனதை மகிழ்விக்கும்
மாமலர் நீ...!!!
சுவாசிக்கும் மலரே...
நேசித்தால் என்ன????