இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு
-------------------------------------------
* புன்னகை மாறா புது முகம் ...
சலசலக்கும் சிறு அருவி...
கீதம் பாட சில குயில்கள்...

* சுற்றிலும் மலர்வனம்..
அதன் நடுவில் ஓர் நந்தவனம்..
கண்ணீர் அறியா கண்கள்...
கனிரசம் சிந்தும் இதழ்கள்..

* பூப்பெய்திய புது மரம்...
கனிகள் பொழியும் கனிமரம்...
அதிகாலை நேரத்தில் ஞாயிறு...
அந்தியில் மலரும் முழுமதி...

* ஒரு யுவன்....
ஓர் யுகம்...
இது போதும் எனக்கு.....

********************************************

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (14-Sep-15, 10:29 am)
Tanglish : ithu pothum enakku
பார்வை : 114

மேலே