உரித்தான காதலுணர் வே - வெண்பாக்கள்

இரு விகற்ப நேரிசை வெண்பா

இருவரின் நெஞ்சினிய தாபம் தணிக்கும்
இருவரின் உள்ளத்தை கோர்க்கும் - புரிதலும்
கண்ணாலே காண முடியாப் பிணைப்பையும்
உண்டாக்கும் காதலுணர் வே!

பல விகற்ப இன்னிசை வெண்பா

இளம்பருவ ஆண்பெண் இருபா லரின்நல்
உளம்கொள் கவர்ச்சியும், ஆழமான அன்பும்,
ஒருவர்தாம் மற்றவரி டம்காட்டும் மாண்பும்
உரித்தான காதலுணர் வே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-15, 9:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே