புதிதாக திருமணமான கணவன் மனைவியிடம்

புதிதாக திருமணமான கணவன் மனைவியிடம்
Darling ஏதவது ஒரு Sweet செய்யேன்.
ஐயய்யோ, எனக்கு சமைக்கவே தெரியாது,இப்போதான் சமையல் புத்தகத்தை பார்த்து ஏதோ பன்றேன், வேணாங்க.
பரவாயில்லை கண்ணே,நீ என்ன பன்னாலும் எனக்கு ok தான்.
சமையலரைக்குள் சென்றாள் புது மனப்பெண்.
5 நிமிடம் ஆனது, 10 நிமிடம் ஆனது, 15 நிமிடமானது, திடீரென்று உள்ளிருந்து சப்தம் கேட்டது.
பாயசம் ஒரு தரம், பாயசம் ரெண்டு தரம், பாயசம் மூனு தரம்...........
கனவன் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தான்,
கையில் சமையல் குறிப்பு புத்தகத்துடன் மனைவி,
என்னம்மா சத்தம் போடுற,
புத்தகத்தை நீட்டினாள்,
அதில் போட்டிருந்தது, பாயசம் கொதித்து முடித்தவுடன் ஏலம்போட்டு இறக்கவும் ...

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Sep-15, 5:47 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே