வாழத்தெரியாத மனிதன்
இளைப்பாற சூரியன் செல்கிறான்....
தன் இடம் தேடி பறவைகள் செல்கிறது...
விளங்குகள் எல்லாம் தன் இருப்பிடம்
அடைத்த பின்னும்...
வாழத்தெரியாத மனிதன் மட்டும்
இன்னும் அலைந்துகொண்டே.............
ஓய்வை தொலைத்து,
உறக்கம் தொலைத்து,
பாசம் தொலைத்து,
காதல் தொலைத்து,
உறவுகள்ளை தொலைத்து,
பணத்தை தேடி...................
இப்படி வாழ்வது வாழ்க்கையா?
இல்லை
வெறும் நாட்களின் கடத்தல்.
வாழ்கை என்பது யாதெனக்கேட்டால்
அன்பை தந்தே இறத்தல் என்பேன்..........