முடியும் தருவாயில்

“ கற்பனைத் தேரில் ஊர்வலம் போகும்
விற்பனை மாந்தர் உலகினில் அதிகம்
அற்புதமான சொல் அலங்காரப் பேச்சே
விற்பனையாளனின் முதல் முதலீடாகும் “

இயற்கை சூழல் எதற்கும் தேவை
செயற்கைக்கு எதற்கு அதிக வேலை
முயற்சி இருந்தால் முடியாதது இல்லை
இகழ்ச்சிதானே முயற்சிக்கு முக்கிய மூலை

விளங்காத வாழ்க்கை வாழ்வதைவிட
வீழ்வதே மேலென்பேன்
இரங்காத ஜென்மம் இருந்தென்ன
இறந்து போ என்பேன்

கலங்காத கண்கள் யாருக்குண்டென
உலகில் தேடுகின்றேன்
அலுங்காத உடம்பை வைத்துக்கொண்டு
அப்படியென்ன உயிரென்றேன்


சுழலும் பூமிபோல் உலவும் ஆவியும்
உலகை சுற்று வருகிறது
வாழும் வாழ்க்கையும் ஆழம் பாத்துதான்
ஆற்றில் காலை விடுகிறது

ஜாதி தீயை மூட்டிவிட்டு - சில
ஜென்மங்கள் குளிர் காய்கின்றது
நீதி வழங்கும் நீதிபதிகளுக்கே – பல
சமயங்களில் குழப்பம் வருகின்றது

நேர்த்திக்கடன் முடிப்பதற்கு –
தெய்வத் திருத்தளம் செல்கின்றார்
செய்தப்பாவம் துளைப்பதற்கு –
புனித தீர்தத்தில் குளிக்கின்றார்

மூடநம்பிக்கையில் முழ்கி முழ்கியே
முக்கால் வாழ்வை கழிக்கின்றார்
மூச்சு முடியப்போகும் தருவாயில்தான்
மனிதர் மனிதராய் இருக்கின்றார்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (14-Sep-15, 7:53 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : mudiyum tharuvayil
பார்வை : 54

மேலே