இல்லம்தோறும் இணையம்

ஒழுங்கா படுத்து எந்திருக்க இங்க பல லட்சம் பேருக்கு ஒழுகாத குடிசையில்லை... குந்துறாதுக்கு எடமில்ல. ஒதுங்கறதுக்கு மறவு இல்ல. இதுல எங்க யாருக்கு, எதுக்கு இணையம்?

காசு இருக்குறவங்க கம்ப்யூட்டர் வாங்குறாங்க. டப்பு நெறைய இருந்தா பல ஆயிரங்கள் செலவழிச்சு லேப்டாப் வாங்குறாங்க. பல ஆயிரம் செலவழிச்சு ஒரு பெட்டிய வாங்குறவங்களுக்கு இண்டெர்நெட் கனெக்‌ஷன் கொடுக்க முடியாதா?

எதுக்கு ஒரு அரசு வீடு வீடாப் போய் இண்டெர்நெட் கனெக்‌ஷன் இந்த நாலரை ஆண்டுல கொடுக்குறேனு அறிவிப்பு கொடுக்கணும்? இப்படி அறிவிச்சா இணையம் பயன்படுத்துற எல்லார் ஓட்டும் உடனே கெடச்சிடும்னு எந்த 11 பேர்கொண்ட குழு சொல்லுச்சோ? இல்ல IAS பதவி முடிஞ்ச பின்னாடியும் அரசாட்சியிலயிருந்து கீழ எறங்காம இருக்குற அதிகாரிகள் ஸாரி... அரசு ஆலோசகர்கள் சொன்னாங்களா?

இப்படி ரொம்ப ராங்கா கைட் பண்ணினா, லயோலா புரபஸர் சொல்ற கணெக்கெல்லாம் மண்ணா போயிடும்னு தெரியாத உங்களுக்கு?

வீடு வீடா டீவி பொட்டி கொடுத்தீங்க. அந்த டிவீ பொட்டிக்கு அரசு கேபிளே எல்லா சானலையும் குறைந்த விலையில் நடுவீட்டுக்கு கொண்டு வரும்னு சொன்னாங்க அரசாங்க அதிகாரிங்களும் உங்க அரசு எந்திரமும். ஆனா அரசு கேபிள் 120 ரூவாயிலயிருந்து 160 ரூவா வரைக்கும் வசூல் பண்னிட்டு இருக்காங்க. இதுல வீட்டுக்கு வீடு இணையம்?

சரி யாரு இந்த வேலையை செய்வாங்க? தாசில்தார் ஆபிஸரா?

4ஆவது வருஷம் வந்ததும் அதத் தறோம் இதத் தறோம்னு சொல்லி ஆசை காட்டி ஓட்டு வாங்க நினைக்குற உங்க புத்திசாலித்த்னத்துக்கு முன்னாடி, மக்களும் புத்திசாலித்தனமா இருப்பாங்கன்றத தயவுசெஞ்சு மறந்திடாதீங்க.
ஆட்சியில் இல்லாத ’அந்த’ காலகட்டத்தில் அரசு சார்பா ஒரு செங்கல்லு கூட இடம்பெயரலங்க்குற போது, அரசாங்க வேல சார்ந்த ஃபைல்கள் எப்படி நகர்ந்திருக்கும்... என்ன வேல நடந்திச்சுன்னு மக்கள் அவ்வளவு சீக்கிறம் மறந்துற மாட்டாங்க.

இதுல பாலுல தண்ணி கலந்தது, தண்ணியில பாலக் கலந்தது, சகாயத்துக்கு தண்ணி காட்டுனது, கிரானைட், அப்புறம் அந்த தாது மணல்னு எல்லாத்தையும் அம்புட்டு சீக்கிரமா மறந்துடுவாங்களா?

மக்கள் அப்படி எல்லாத்தையும் மறக்கணும்னு யாகம் நடத்துனா அது உங்க லக்கு

அதுக்காக மாற்றம் முன்னேறம் அன்புமணிக்கெல்லாம் வாய்ப்பு தந்துட மாட்டாங்க எங்க மக்க!

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (14-Sep-15, 10:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே