நரையும் white hair கறையும் hair டை நகைச்சுவை சிலேடை
நரையும் (WHITE HAIR ) கறையும் ()HAIR DYE ) ( நகைச்சுவை சிலேடை )
************************************************************************************************************
1.. நரை கண்ட குறை கண்டு கறை கண்ட நரை உண்டு
2. நரை உண்ட கறை கண்டு நிறை கண்ட நரை உண்டோ
3. கறை உண்டு நிறை கண்ட நரை உண்டோ கரை கண்டு
4. கறை கண்டு கரை கண்ட நரை உண்டோ நரை உண்டோ
5. குறை கண்ட கறை உண்டு கறை கண்ட நிறை உண்டோ
6. நரை நிறை கறை நிறை குறை கறை கரை நிறை
7. மன அறை கனம் மறை நரை கரை கறை குறை
8. வி கேர் யு கேர் வி கேர் அவர் ஹேர் !!!
**************************************************
( சிலேடை விளக்கம் )
1.நரை கண்ட : தலைமுடி வெண்மை ஆவதை கண்டபின்
குறை கண்ட :- அதை குறையாய் நினைத்து
கறை கண்ட :- அதற்கொரு சாயம் தேர்வு செய்த
நரை உண்டு :- மனிதர் (நரன் நாரி ) உண்டு
2. நரை உண்ட :- நரையனது அது தான் ஏற்றுக்கொண்ட
கறை கண்டு :- சாயம் அதனைக் கண்டு
நிறை கண்ட :- மன நிறைவு அடைந்த
நரை உண்டா :- மனிதர் உண்டா
3. கறை உண்டு :- சாயத்தை ஏற்றுக்கொண்டு
நிறை கண்ட :- மனம் நிறைந்த
நரை உண்டோ :- வெள்ளை முடியும் உண்டோ
கரை கண்டு :- முழு திருப்தி அடைதல்
4. கறை கண்டு :- சாயத்தை தேர்வுசெய்து
கரை கண்ட :- திருப்தி அடைந்த
நரை உண்டோ :- மனிதர் உண்டோ
நரை உண்டோ :- வெள்ளை முடியும் உண்டோ
5. குறை கண்ட :- குறை உள்ள
கறை உண்டு :- சாயம் உண்டு
கறை கண்ட :- வெள்ளைமுடி மீண்டும் தொன்றமளிருக்க சாயத்தை தேர்வுசெய்த
நிறை உண்டோ :- மன நிறைவு உண்டோ
6. நரை நிறை :- வெள்ளைமுடி பெருக
கறை நிறை :- சாயங்களும் பெருகும் (வகை வகையாய் )
குறை கறை :- குறையுள்ள சாயங்கள்
கரை நிறை :- நாடெங்கும் நிறைந்திருக்கும்
7. மன அறை :- நமது மன அறையில்
கனம் மறை :- அழுத்தம் (மன அழுத்தம் ) இல்லாமல் இரு
நரை கரை :- நரைமுடி கரையும் (தோன்றாது)
கறை குறை :- அதற்குரிய சாய வகைகளும் தோன்றாது
8. வி கேர் யு கேர் வி கேர் அவர் ஹேர்
(WE CARE ) (YOU CARE ) (WE CARE ) (OUR HAAIR )
**********************
(இது ஒரு நகைச்சுவை சிலேடையே . மற்றபடி ஏதுமில்லை )