ரவுடிகளின் பிதாமகன்

டேய் சென்னையிலே கடந்த 85 ஆண்டுகளுக்கு மேல ரவுடியா வலம் வந்திட்டிருக்கவரும், ஆயிரக்கணக்கான ரவுடிகள உருவாக்கி பல மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் அவுங்கள அனுப்பி வச்சு ரவுடித்தனத்தின் வளர்ச்சிக்கும் தன்னோட 99 வது வயதிலும் அரும்பாடுபட்டு வரும் ரவுடி ராக்கோழி ராக்கப்பன் தாத்தாவுக்கு வர்ற அக்டோபர் மாசம் நூறாவது பிறந்த நாள் வருது. அத நம்ம அனைத்திந்திய ரவுடிகளின் கூட்டமைப்பு சிறப்பாக் கொண்டாலாம்ன்னு முடிவு எடுத்திருக்கு.

நம்ம சென்னை ரவடிங்களெல்லாம் ராக்கப்பன் தாத்தாவோட நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாடப் போறோம்?

அட நம்ம ரவுடிங்க வளச்சு போட்ட எத்தனையோ எடங்கள் இருக்குது. அதிலே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிலே ராக்கப்பன் தாத்தாவுக்கு ஒரு சிலை வைக்கணும். அடுத்து ரவுடிங்க கூட்டமைப்பு மாநாட்டிலே ராக்கப்பன் தாத்தாவுக்கு "ரவுடிகளின் பிதாமகன்"ங்கற பட்டத்தைக் குடுக்கணும். இளம் ரவுடிகளான நாமெல்லாம் அவரோட கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கணும்.

அருமையான யோசனைடா சுக்கு சுரேஷூ. நொள்ளக் கண்ணு பாலாவும் தலையாட்டி ஆதரவு தருவாம் போல இருக்கு.

எழுதியவர் : மலர் (15-Sep-15, 12:26 am)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே