என்னவள் 6~~ அர்ஷத்
உன்
ஊடல் திறக்கும்
சாவியாகவே இருக்கிறது
என் கெஞ்சல் - சிலநேரம்
கள்ளச்சாவி ஆகிவிடுகிறது
ஒரு "முத்தம்" ....!!!
காலை
எழுந்தவுடன்
என் கன்னம்
எனும் "ப்ரஷ்" இல்
நீ வைக்கும் பேஸ்ட்
உன் முத்தம்...!!!
உன்னை
பார்த்ததும்
தேனீ திகைத்தது
இவ்வளவு பெரிய
பூவா என்று !!!
வாத்தியார்
வந்ததும்
பிட்டை மறைக்கும்
மாணவனைப்போல
அடிகடி - உன்
முந்தானையை
சரி செய்கிறாய் ...!!!
நீ
எனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பும்போதெல்லாம்
மகிழ்ச்சியில் குதிக்கிறது
என் கைபேசி ...!!!
தெருவில்
நீ நடந்து
சென்றாய்..
குழந்தைகள்
எல்லாம் கத்தின
ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்
என்று ...!!!
இனிப்பை
மொய்க்கும்
"ஈ" யை போல
என்னை
மொய்க்கிறது
உன் வாசம் ...!!!
காற்று
உள்ளே
போன
பஞ்சுமிட்டாய்
பாக்கெட் போல
தின்னாமல்
கரைகிறது
என் இளமை ...!!!
பகலில்
உன்னோடு
வானம்
எடுத்துக்கொண்ட
"செல்பி"யை
இரவில் தன்
வால்பேப்பராக
வைத்துக்கொண்டது
தான் இந்த வானவிலா...!!!
சுரசுரப்பில்லாத
வழுவழுப்பான
தேன்கூடு
உன்னிதழ்...!!!
இரவு
உணவில்
துவையல்
இல்லாத
நேரங்களில்
நான் தொட்டுக்கொள்ளும்
இனிப்புசேவ் - நீ...!!!
உன்
முகத்தில்
இறைவன் வைத்த
திருஷ்டி போட்டு
உன் "பிம்பல்"...!!!
உன் தாவணி
நுனி இழுத்து
நீ உன்னிடுப்பில்
சொருகும்போதேல்லாம்
பெரு மூச்சு விடுகிறது
என் கண்கள் ...
நான்
பார்த்ததை - நீ
பார்த்துவிடும்
போதேல்லாம்
மழையில்
நனைந்த
கோழியாகிறது
என் பார்வை...!!!
கரும்பை
பிழிந்து
சக்கரை
செய்வார்கள்
உன் குறும்பை
பிழிந்து
காதல்
செய்யப்போகிறேன்...!!!
உன்னில்
முத்தம்
விதை
விதைத்து
வெட்கம்
அறுவடை
செய்யபோகிறேன்...!!!
"ப்ளீஸ் ஹேன்டுல் வித் கேர்"
என்று
எழுதப்படாத
கண்ணாடி சிலை
நீ ...!!!