பெண் புரட்சி

தேவாணை மலர் சந்தையில்
தேனள்ளும் தேவார தும்பிகளே
தோதான தேனள்ளி குடித்தது போதும்
தேகங்களின் காயங்கள் ஆற்றுங்களே(ன்)..!

இன்சார்ட்டிலும் பெண்களாயென்று
இருதயம் குமுறுகின்ற ஆண்களே..!
இஜட் பிரிவு பாதுகாப்பிலும்
இனி எங்கள் பெண்களே..!

பாரதியின் புதுமைப்பெண்கள்
பாரதத்தில் அதிகம்தான்
பார்போற்றும் பாவைகளாய்
பரிணமிப்பது பெருமைதான் !

ஜக்கம்மாள் புரட்சி நடக்குது
ஜகத்தின் மூக்கை உடைக்குது
ஐதர்கால பெண்ணடிமை போக்க
ஐ பேடில் - அக்ரிமென்ட் போடுது

நாத்து நட்டு நலிந்த கைகள்
துப்பாக்கி ஏந்தி காவல் காக்குது
சைக்கிள் ஓட்ட பயந்த கால்கள்
ராக்கெட்டில் ஏறி ஜமாய்க்குது

தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு
நீண்டுக்கொண்டேப்போகுது
தேர்வுத்துறையே தேர்ச்சியை எண்ணி
வியப்பில் அசந்துப்போகுது

பத்தாம் வகுப்பு முடிப்பதே
அப்போதெல்லாம் அக்கப் போராகும்
பட்டப் படிப்பு முடிப்பதே
இப்போதெல்லாம் சத்திய திட்டமாகும்

ஆணுக்கடிமை பெண்ணென்ற காலம்
ஐடெக் யுகத்தில் அவையெல்லாம் மாயம்
பெண்ணுக்குரிமை சமமென்ற பாகம்
ஐ நா சபையே அங்கீகரித்த பாடம்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Sep-15, 12:08 pm)
Tanglish : pen puratchi
பார்வை : 205

மேலே