சிறுகதை எழுதுங்கள்
கதைத் தலைப்பு : பாரிஸ் கார்னர் ஆரஞ்சு வண்ண தேவதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரம்பவரிகள் : ---
பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது ஆரஞ்சு வண்ண சூடிதாரில்
பஸ் ஏறினாள் ஒரு தேவதை . இறைவன் இவளை யாருக்காக படைத்திருப்பான் என்று யோசித்தேன் . ஒருவேளை எனக்காகத் தானோ என்ற எண்ணம் மனதில் ஓடியது
அருகில் இருந்தவர் எழுந்து போக. அவள் என்னருகில் அமர்ந்தாள்.....
இதற்கு மேலே உங்கள் கற்பனையை ஓட விடுங்கள்
இது போட்டியல்ல ; பரிசு பட்டயம் சான்றிதழ் எல்லாம் இல்லை
சிறந்ததை விமரிசனம் பக்கத்தில் அலசி திறனாய்வு செய்து வெளியிடுவேன்
உங்கள் பக்கத்தில் இதே தலைப்பில் ஆரம்ப வரிகளுடன் எழுதுங்கள்
எனக்கு தெரிவிக்கவும்
அதிக பட்சம் பத்துக் கதைகள் பதிவு நேரப்படி தெரிவு செய்வேன்
குறைந்தது ஒரு கதை .
இதன் நோக்கம் உங்கள் கதை ஆர்வத்தை திறனை வளர்ப்பதே
எனது அணுகுமுறை பாரபட்சம் அற்றதாக இருக்கும் என்பதை இங்கு
என்னை கவிதை கருத்து மூலம் நன்கு அறிந்தவர்கள் அறிவார்கள்
சிறுகதை சிறுத்தைகளே தொடங்கலாம் !
-----அன்புடன் கதைப் பிரியன் கவின் சாரலன்