பயணிக்கிறேன்

சாலை நெடுக நீ இன்றி நடக்க
சாலை சொன்னது உன்னோடு நடந்ததை..
அன்று நிஜமாக தெரிந்தது எல்லாம்
இன்று நிழலாக தெரிகிறது..
கடிதங்களில் பேசிய நாட்களை
நீயாக இன்று காகிதங்கள் பேசுகின்றது..
நினைக்கவில்லை நிகழ்காலம் நின்றுவிடும்
இறந்தகாலம் இறந்துவிடும் என்று..
எதிர் காலமும் உன் காதலும் மட்டும் மீதி இருக்கிறது
பயணிக்கிறேன் பயணத்தடங்கள் பலவோடு...