பற்றி எரியும் தீ காதல் கவிதை

இதயம் வலிக்காமல்
எப்படிச் சொன்னாய்..?
"கேவலமானவள்" என்று......
அந்த
மரண வார்த்தையை கேட்டதும்
என் செவி நரம்புகள் சேதமடைந்து விட்டன.

கோடிக் குண்டூசியை
கொட்டிக் கொட்டி
விழிகளுக்குள்
அழுத்தியது போல.....
கொடூரமானதல்லவா உன் பிரிவு.....

இதயம் கூட ஏதோ
ஓர் இருட்டறையில்.....
சிலு சிலுக்கும் தென்றலாய்
சிதறிச் சேர்கிறேன்.......
முகாரி ராகத்தை மூச்சு போல
முணுமுணுக்க முடியாமல்..

என்னால் முடியவில்லை!
அணுஅணுவாய் கொல்வதற்கா
அன்று உன் காதல் சொன்னாய்????
என்னை கொன்றுவிடு அன்பே
உன்நினைவுகளை வெல்வதற்கு..!

எழுதியவர் : செண்பகவல்லி (16-Sep-15, 12:15 pm)
பார்வை : 213

மேலே