செண்பக வள்ளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செண்பக வள்ளி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Aug-2015
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  14

என் படைப்புகள்
செண்பக வள்ளி செய்திகள்
செண்பக வள்ளி - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 11:45 am

ஓரேயோர் வார்த்தை மட்டுமே,
தினம் நான் யாசகம் கேட்கிறேன்...
அதை ஏன் மறுக்கிறாய்,
நானும் சுவாசிக்கவே மறக்கிறேன்!

உன் மௌனங்களோடு
இயைந்து வாழும் அனுமதியை
என் நிஜங்கள் இன்னுமே
பெறவில்லை அன்பே...

இதயம் வலிக்கின்றது...
விழிகள் நனைகின்றது...
உயிரானவனே நீயும் - ஊமை
நாடகம் அரங்கேற்றும் நேரம்!

உன் காந்தக் கண்களோடு,
இனிவரும் காலம் யாவிலும்
புன்னகைகளின் முகவரிகள்
எழுதி போவதே இவள் அவா..

விரக்தியின் விம்பங்கள்
உன் இதழ்களில் படிந்திட
இவள் அன்பு தொந்தரவுகளே
பாதை வகுத்திடுமோ என்று,
உள்ளுக்குள் ஓர் ஐயம்!

தொல்லையென என்னை
நொடியேனும் எண்ணிவிடாதே..
அங்கே, அந்த நிமிடமே
அர்த்தமிழக

மேலும்

சிறப்பு.. 04-Dec-2015 9:19 am
நிதர்சனங்களை கவிக்குள் கொட்டி உள்ளீர் தோழியே!! நல்ல அனுபவக் காற்று பலமாய் கவிக்குள் வீசுவதை உணர்ந்தேன் நானும் 04-Dec-2015 12:00 am
எனக்காய் என்னை காதலிக்க வேண்டாம், உனக்காய் என்னை காதலித்துப் பார்!.., கண்டிப்பாக அந்த ஓர் நாளுக்காய் ....!!! 27-Sep-2015 8:02 pm
எனக்கு, எனக்கு, என தன்னோடு முடித்து விடாமல். உன்னோடு நான், என்னோடு நீ, என முடித்த பாணி அழகு...நல்ல கவி...வாழ்த்துக்கள்,. 21-Sep-2015 10:11 am
செண்பக வள்ளி - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 2:16 pm

எனது தலை மீது
பறக்கும் பறவையே
உன் சிறகுகளின் கீழ்
எனை எடுத்துக் கொள்!

இந்த நேரத்தில்
உன் மனதில்
இரக்கம் இருப்பின்
கொஞ்சமாவது
சுரக்கட்டுமே!.

சொந்த நாட்டில்
இருக்கும்போதே
நாடு கடத்தப்பட்ட
என் மன்றாட்டை
உன் கூட்டிற்குள் இழு!

பசி இருக்கட்டும்
உடல் மரத்துப்
பிடித்துக் கொண்டு
கொண்டு இருக்கும்
விரல்கள் வலிக்க,
மரத்துக்குத் தெரியுமா
இன்னும் கொஞ்சம்
நேரத்தில் இந்த
ஏரியின் வெள்ளம்
என் தலைக்கு மேல்
ஏறும் என்று..

தூரத்துப் படகுகள்
இல்லை நட்சத்திரங்கள்
என்னை ஏமாற்றின..
எனக்கும் ஒரு கனவு
இருந்து வந்தது.

அதுவும் என்னைக்
கடந்து போனது.
இப்போது இவ்வுலகில்
எனக்க

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 04-Dec-2015 11:05 am
சென்னை கண்முன் விரிகிறது .. துக்கம் நெஞ்சை அடைக்கிறது .. கவிதை உயிரைப் பிழிகிறது ஆழ்ந்த படைப்பு 03-Dec-2015 12:28 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 02-Dec-2015 3:36 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 02-Dec-2015 3:36 pm
மனோ ரெட் அளித்த எண்ணத்தை (public) ஆனந்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Dec-2015 1:02 pm

அழவைத்த மழை..!-Mano Red

சென்னை வந்தாரை வாழ வைத்தது!.
எத்தனையோ இளைஞர்களின் கனவை நிறைவேற்றி இருக்கு, நிறைவேற்றவும் காத்திருக்கிறது. இப்போது
சென்னை தத்தளிக்கிறது.



நல்லார் ஒருவர் உளரே
அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இப்போ அந்த நல்லவன் எல்லோருக்கும் கெட்டவனா
தெரிகிறான். இதான் சார் நேரம். மழை விடாம பெய்யுது.



வழக்கம் போல வட இந்தியா
மீடியாக்கள் சென்னை மற்றும் தமிழக சோகத்தை கண்டு கொள்ளவில்லை. டிஆர்பி வடைக்காக ஏங்கும் அந்தக் காக்கைகள் கத்துவதற்கு கூட தயாரில்லை.



குழம்பிய குட்டையில்
எல்லா அரசியல்வாதிகளும் ஓட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மாண்புமிகு புரட்சிதலைவி
இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று தூபம் போட இங்கு நிறைய தொண்டரடிப்பொடிகள்!

உணவைக் கொடுத்து வாக்காளப் பெருமக்களே என ஓட்டு கேட்கவும் மறக்கவில்லை.



நடிகர்களும் உதவிப் போர்வையில்
மீண்டும் விளம்பரம் தேடவே போஸ்டரும் கையுமாக உலா வருகிறார்கள்.



இந்த மழையை மையமா வச்சு
நாலஞ்சு சினிமா எடுப்பானுக கோடம்பாக்க கிறுக்கனுக.



 



இதற்கிடையில்,



கரண்ட் இல்ல, வீடு இல்ல,
சாப்பாடு இல்ல, தண்ணி மட்டும் ரொம்ப இருக்கு குடிக்க முடில.



பாலம் உடையுது, ரோடு
குழியாகுது, மரம் முறிகிறது, தண்ணில கால் வைத்தால் கரண்ட் அடிக்குது,



நெட்வோர்க் இல்ல..போன்
போகல..எதும் மெசேஜ் அப்பா அம்மாட்ட இருந்து வந்துச்சா தெரியல. நரகத்தின் மாதிரிகள்
நகரமென புரிய வைத்தது மழை.



கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,
முதியவர்கள் முகத்தில் பரிதவிப்புகள்.



தெரு நாய்கள் உணவு இருக்க
இடமின்றி தவித்து அலைகின்றன



சந்து பொந்துல இருந்த
பாம்பு, தவளையெல்லாம் வெளிய வந்தாச்சு!!



மழை பெய்யலைன்னாலும்
புலம்புவோம். மழை பெய்ஞ்சாலும் புலம்புவோம்.



சென்னைக்கு ஒன்னும் ஆகாது, துப்புரவுபணியாளர்கள்
பஸ்ஓட்டுநர்கள்
தீயணைப்புவீரர்கள்
உதவிகுழுக்கள்
சமூகசேவை
 இருக்கும்வரை



சென்னை மாநகராட்சி துப்புரவு
ஊழியர்கள் கடவுளாக இருக்கும்போது, வெளியூர் சொந்தங்கள் சென்னை மக்களை நினைத்து வருந்த
வேண்டாம். உயிரைக் கொடுத்து உதவ ஓடி வருகிறார்கள்.



 வீட்டிற்குச்
செல்லாமல் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் இருப்பதால் கொஞ்சம் தைரியம் பிறக்கிறது.



சென்னையின் பலமுகங்களில்
இந்த முகம் கோரமானது. நேரில் பார்த்து அனுபவித்து தத்தளிதுவிட்டேன் என்பதால் என்னவோ புதுமையாக உணர
மனம் வரவில்லை. எங்கோ இருந்துகொண்டு, செய்திகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ’உச்’ கொட்டும்
நீங்கள் இருக்கும்வரை யாருக்கும் ஒன்று ஆகாது.

முடிந்தவரை உதவுவோம். சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும்

என்னதான் இருந்தாலும் சென்னை விட்டுச் செல்ல மனமில்லை.



இந்தமுறை மழை தன் இருப்பை
மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் தெரு தெருவாகப் பதிந்துவிட்டுச் செல்லும். பள்ளிகளுக்கு லீவு விட்டு, மக்களுக்கு பாடம் எடுக்கிறது மழை. படித்துக்கொள்வோம்.



மேலும்

நிறைய பாடங்கள் படிக்க வேட்டிய கல்லூரியாகிவிட்டது சென்னை மழை! அதுவும் கல்லூரி கல்லூரியாகப் போய் ' படி ' என்று சொல்லிவிட்டு வந்துள்ளது... இனிமேலாவது படிப்போம்! 06-Dec-2015 2:48 pm
அப்டியா...சரிங்க தேள் 05-Dec-2015 1:30 pm
சம்பதம் இறுக்குயா நாணும் மழில நனைச்சவன் ங்கற சம்பன்தம் நன்ட்ரி 05-Dec-2015 12:22 pm
பழம் விற்பவனும் பால் விற்பவனும் ஏழைதான் . இது தருணம் என்று நாலு காசு பார்க்கிறான் . நம்மிடம் பணம் இருந்தால் முன்நூரோ நூற்றைம்பதோ கொடுத்தாகிலும் வாங்கி தேவையானவர்களுக்கு கொடுக்க வேண்டும் . பால் அழுது கொண்டிருக்கும் குழந்தையின் பசியைத் தீர்க்கும். இரண்டு பழம் முதியவன் ஜீவித்திருக்க உதவும் . உங்கள் அளவில் எப்படி உதவ முடியுமோ அப்படி உதவுங்கள். வாழ்த்துகிறேன் மனோ ---அன்புடன்,கவின் சாரலன் 04-Dec-2015 3:35 pm
அர்ஷத் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Dec-2015 2:48 pm

விழிமேக தூரலில் - உயிர்
பயிரும் பிழைக்குமா
கசியும் நிமிடம் - நீ
வந்தால் கசங்குமா
மையல் கொண்ட மனது-மரபு
வேலியை உடைக்குமா
புழுங்கி கிடக்கும் உயிர் - வேறு
காதல் புனையுமா
உலா வந்த விரல்கள் - வேறு
தேசம் தேடுமா
உன்னை நனைத்த - என்னிதழ்
மழை பிற நிலத்தை நனைக்குமா ...

மேலும்

மிக்க நன்றிகள் நட்பே 03-Dec-2015 10:40 am
நன்றி தோழியே ... 03-Dec-2015 10:40 am
நன்றிகள் தோழமையே ... 03-Dec-2015 10:40 am
நன்றி சர்பான்... 03-Dec-2015 10:40 am
செண்பக வள்ளி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:42 am

வாழ்வே தவம்
மகிழ்வோடு
முயற்சி செய்-எல்லாம்
முடியும் உன்னால்....

மேலும்

nyc........... 28-Nov-2015 9:37 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 1:00 am
செண்பக வள்ளி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:36 am

இன்பமும் துன்பமும்
வாழ்வை துளையிடும்
கருவிகளா?

மேலும்

nyc........................ 28-Nov-2015 9:58 am
இரண்டும் கருவிகள் தான் 25-Nov-2015 12:58 pm
செண்பக வள்ளி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:34 am

ஆவலோடு நான்
செய்யும்
அர்ச்சனை எல்லாம்
உனை சேர்ந்திடவே....

மேலும்

nyc...... 28-Nov-2015 9:56 am
காதலின் காணிக்கை அவள் காலில் கொளுசாகட்டும் 25-Nov-2015 12:56 pm
செண்பக வள்ளி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:32 am

காரியவாதியா
கவனமாயிரு
சந்தர்ப்பவாதியா
சவாலாயிரு
சுயநலவாதியா
சூட்மமாயிரு....

மேலும்

nyc............ 28-Nov-2015 9:54 am
சிறப்பு மா.. 25-Nov-2015 9:53 pm
இடம் பொருள் அறிந்து நடந்தால் நலமே தான் 25-Nov-2015 12:54 pm
செண்பக வள்ளி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2015 9:09 pm

கள்ளமில்லா மனதோடு
கவலையில்லா உறவாய்
நித்தம் நூறு கதை பேசி
அளந்தோம்...

யார் கண்கள் பட்டனவோ?
இடி ஒன்று இறங்கியதோ?
யானறியேன்...

மயிலிறகாய் உன் நேசம்
மனம் வருடி மாயமாய்
சென்றதேன்...

இம்மாய உலகின் மயான
அமைதிக்குள் என்னை
மட்டும் தனியே
விட்டதேன்...

விண்மீன்கள் பார்த்தாலும்
உன் ஞாபகம்
மண்மீன்கள் பார்த்தாலும்
உன் ஞாபகம்
தினம் தினம் கரையேறுகிறது
மனதோடு...

கண்ஜாடைக் காட்டி பார்த்த
கள்ளப் பார்வைகள் எல்லாம்
கனவாய் போனதோ
நேற்றோடு...

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........................ 24-Dec-2015 12:45 pm
nyc........ 28-Nov-2015 9:04 am
வலியாய் படைப்பு.... நன்று..! 27-Nov-2015 8:35 pm
தங்களின் இனிமையான கருத்தினில்...மிக்க மகிழ்ச்சி....நன்றி.... 24-Nov-2015 4:51 pm
செண்பக வள்ளி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2015 9:42 pm

மனம் முழுவதிலும் ஏக்கம்
கன்னங்கள் இரண்டிலும் ஏழை
என்பதின் தாக்கம்........

நெடுந்துயர் கட்டிடம்
இவர்களை சுற்றிலும்.
அண்ட மட்டும் வழி இல்லை.....

சிந்தைக்குள் நித்தம் நித்தம்
பெருமூச்சு......
நமக்கும் ஓர் நாள்
விடியாதா....என்று
ஏக்கத்தோடே....

தினம் தினம் அறு நூறு
சுவை
கொத்தன் இவர்களிடம்
பேசும் பேச்சினில் மட்டும்....

அடுக்கும் கல் அனைத்தும்
இவர்களது கல்லறையா(ய்) ....

தலை சுமையை இறக்கி
விடலாம்.
உள்ளத்து உணர்வுகளை.......

நெருக்கடியில்
இரைப்பைக்கு
இரப்பையே உணவாகி
பெருந்துயர் கண்டிடும்
இவர்களின் நிலை தான்
என்னவோ....

யார் தான்

மேலும்

காதல் என்றாலும் திருமணம் என்றாலும் அங்கே தம் இருவர் வாழ்க்கை மட்டுமே இருப்பதாய் பலர் பயணிக்கும் பாதையில் தம் சந்ததியர் வாழ்வுபற்றி முன்பே என்னும் பழக்கம் இல்லாததே இதன் காரணமும் அவற்றிலே தீர்வும்..... 24-Dec-2015 12:47 pm
மன்னிக்கவும் சகோதரி.... வலிகள் என்பதிற்கு பதில் வழிகள் என்று தட்டச்சு செய்துவிட்டேன்..... 26-Nov-2015 5:51 am
வழிகள் மிகுந்த வரிகள்..... மிகவும் அருமை சகோதரி........ 26-Nov-2015 5:50 am
தங்களின் கருத்தினில் மிக்க மகிழ்ச்சி....நன்றி.....அண்ணா... 24-Nov-2015 11:56 am
செண்பக வள்ளி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2015 8:17 am

ஞானம் சூன்யமில்லை
காலத்தை கடந்த நிலை.
வாழ்வை நேசி
பெருந்தனிமையிலும்
துயரங்கள் வரா....

ஆழ்ந்துநோக்கு
பிரபஞ்சமே உனது
ஆழ்ந்து யோசி
புலப்படும்
வாழ்வின் ரகசியம்
சொர்க்கமென.
யார் இட்டது பூமியென
பெயர்
நான் யார்? நீ யார்?
நாம் யார்?
யோசிக்கத் தோன்றுகிறதா?
வாழ்வின் அரைநிலை
கடந்தாய் நீ.....

பிரளயப்படுகிறதா?
வாழ்வின் சில நொடி
அந்நொடிகளை ஆதரிக்காதே
மாறாய் உன் கவனத்தை
வண்ணமாய் திருப்பிடு
பிடித்த ஒன்றில்....

யார் அந்த நால்வர் - உனை
கண்டு சிரித்திட.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
என நினைத்துப் பழகு.
எதிர் தராசு தட்டிலும் நீயே தான்
வளமான வாழ்வு உனதே தான்.....

கவனமாய் இரு
கண்

மேலும்

ம்ம் ....நன்றி 18-Nov-2015 9:00 am
அருமை ஆனந்தி..... 18-Nov-2015 8:48 am
தங்களின் இனிமையான கருத்தினில் மிக்க மகிழ்ச்சி...நன்றி.... 16-Nov-2015 7:11 am
மிக அருமை தோழமையே... முக்கியமாக இதை கையாண்ட விதத்திலேயே இந்த படைப்பு இன்னும் உயர்ந்து நிற்கிறது... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 3:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
user photo

கவிகுமார் முருகானந்தம்

தஞ்சாவூர் /கும்பகோணம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
vinovino

vinovino

chennai
மேலே