தனியே விட்டது ஏன்-ஆனந்தி

கள்ளமில்லா மனதோடு
கவலையில்லா உறவாய்
நித்தம் நூறு கதை பேசி
அளந்தோம்...

யார் கண்கள் பட்டனவோ?
இடி ஒன்று இறங்கியதோ?
யானறியேன்...

மயிலிறகாய் உன் நேசம்
மனம் வருடி மாயமாய்
சென்றதேன்...

இம்மாய உலகின் மயான
அமைதிக்குள் என்னை
மட்டும் தனியே
விட்டதேன்...

விண்மீன்கள் பார்த்தாலும்
உன் ஞாபகம்
மண்மீன்கள் பார்த்தாலும்
உன் ஞாபகம்
தினம் தினம் கரையேறுகிறது
மனதோடு...

கண்ஜாடைக் காட்டி பார்த்த
கள்ளப் பார்வைகள் எல்லாம்
கனவாய் போனதோ
நேற்றோடு...

எழுதியவர் : ஆனந்தி.ரா (21-Nov-15, 9:09 pm)
பார்வை : 817

மேலே