ஞானத்தை வெல் - ஆனந்தி

ஞானம் சூன்யமில்லை
காலத்தை கடந்த நிலை.
வாழ்வை நேசி
பெருந்தனிமையிலும்
துயரங்கள் வரா....

ஆழ்ந்துநோக்கு
பிரபஞ்சமே உனது
ஆழ்ந்து யோசி
புலப்படும்
வாழ்வின் ரகசியம்
சொர்க்கமென.
யார் இட்டது பூமியென
பெயர்
நான் யார்? நீ யார்?
நாம் யார்?
யோசிக்கத் தோன்றுகிறதா?
வாழ்வின் அரைநிலை
கடந்தாய் நீ.....

பிரளயப்படுகிறதா?
வாழ்வின் சில நொடி
அந்நொடிகளை ஆதரிக்காதே
மாறாய் உன் கவனத்தை
வண்ணமாய் திருப்பிடு
பிடித்த ஒன்றில்....

யார் அந்த நால்வர் - உனை
கண்டு சிரித்திட.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
என நினைத்துப் பழகு.
எதிர் தராசு தட்டிலும் நீயே தான்
வளமான வாழ்வு உனதே தான்.....

கவனமாய் இரு
கண் அசைத்தால் கண்மணியை
பிடுங்கிடும் உலகம் இது.

சொல்லுக்குள் அர்த்தத்தையோ,
அர்த்தத்துக்குள் சொல்லையோ
திணித்திடும் சில நாக்கு.
நிதானம் காத்திடு....

தழும்புகள் உள்ளது தான் வாழ்வு
நீ ஒருபோதும் தயக்கமுறாதே.
தயங்கி விடாதே.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
உனக்கு நிகர் இங்கு எவரும் இல்லை....

யார் யாரை
வலுவற்றவனாக மாற்ற.
உன் ஒற்றை புன்னகை போதும்
இந்த உலகத்தையே வென்று வீழ்த்திட.
காலம் இட்ட கோலமில்லை வாழ்வு.
நாம் வாசலில் இடும் கோலம் தான் வாழ்வும்.
வண்ணமாய் மாற்றிடலாம்....

அன்பு கொண்டவனிடம் அடங்கிப்
பழகு.
ஆசைக் கொண்டவனிடம்
அடங்காப் பழகு.

அலைகளின் விடாமுயற்சி உன்
ஞானத்தை வெல்லும் முயற்சியா?
வேண்டாம் என உதறிடும்
கைகளை விட்டு ஒழி.

நித்திரையின் எந்நொடியும்
யாருக்கானதும் அல்ல
விடியலின் மூச்சு உள்ள வரை.

அஞ்ஞானம் மிரண்டோடட்டும்
மெய்ஞானம் திரும்பிடும்
திசையெங்கும் தூய்மையின்
முரசு கொட்டி துதிப் பாடட்டும்
வாழ்க்கைப் பயணம்
தொடரட்டும் இனிதாய்.

யாருக்கும் மண்டியிடாது
மயக்கும் மனிதரிடம் மாட்டிடாது
அதிர்ஷ்டங்களில் அலைப் பாய்ந்திடாது.
வாழ்வுக்கு நேரடியாய்
சவால் விட்டு.
அழகு போதைக்குள் அழிந்திடாது
வீரத்திலும் எளிமையாய்
பூத்த முகமாய்
களங்கமறியா மனதோடு
அர்ப்பண வாழ்வோடு
தெளிவான மனோபாவத்தோடு
உனது ஏழாம் அறிவோடு....

எழுதியவர் : ஆனந்தி.ரா (15-Nov-15, 8:17 am)
பார்வை : 101

மேலே