மழை - 3

TRP மட்டுமே குறி வைத்து இங்கே இயங்குது
சில அல்லது பல தொலைக்காட்சிகள்...

மழைக்கு கூட ஒதுங்காத மனிதர்கள்
இங்கே செய்வது மக்களாட்சி என்றே
மார் தட்டி சொல்ல ஒரு காட்சி.
அரசுக்கு அடிக்கும் ஜால்ரா - ஏனெனில்
அரசு விளம்பரங்களை அள்ளிக்கொள்ளவே!

கடமைக்கு கூட காசு கேட்கும் இவர்களின்
சமூக அக்கறையை எப்படி மெச்சுவது?
செய்திகளில் இருட்டடிப்பு தகவல்கள் இழுத்தடிப்பு
செய்தி சேகரிக்கும் நிருபர்களுமின்றி
நேரங்கடத்தி வீணாக வெட்டிப்பேச்சு....

கஷ்ட காலத்தில் தோள் கொடுக்கும்
செஞ்சிலுவை சங்கமெங்கே?
லயன்ஸ் ரோட்டரிகள் எங்கே?
பேரிடர் தடுப்படை எங்கே?
இவைகளுடன் தோள் சேர்ந்து
பணியாற்றாது பதுங்கு குழியில்
விழுந்து கிடக்கும் பண்பாளர்கள் எங்கே?

தேடுங்கள் இழுத்து வந்து கேளுங்கள்
அரங்கேற்றினால் தெரியும்
அவர்களின் லட்சணங்கள்
இல்லை இல்லை அவலட்சணங்கள்...

எழுதியவர் : செல்வமணி (14-Nov-15, 11:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 142

மேலே