எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழவைத்த மழை..!-Mano Red சென்னை வந்தாரை வாழ வைத்தது!....

அழவைத்த மழை..!-Mano Red

சென்னை வந்தாரை வாழ வைத்தது!.
எத்தனையோ இளைஞர்களின் கனவை நிறைவேற்றி இருக்கு, நிறைவேற்றவும் காத்திருக்கிறது. இப்போது
சென்னை தத்தளிக்கிறது.



நல்லார் ஒருவர் உளரே
அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இப்போ அந்த நல்லவன் எல்லோருக்கும் கெட்டவனா
தெரிகிறான். இதான் சார் நேரம். மழை விடாம பெய்யுது.



வழக்கம் போல வட இந்தியா
மீடியாக்கள் சென்னை மற்றும் தமிழக சோகத்தை கண்டு கொள்ளவில்லை. டிஆர்பி வடைக்காக ஏங்கும் அந்தக் காக்கைகள் கத்துவதற்கு கூட தயாரில்லை.



குழம்பிய குட்டையில்
எல்லா அரசியல்வாதிகளும் ஓட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மாண்புமிகு புரட்சிதலைவி
இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று தூபம் போட இங்கு நிறைய தொண்டரடிப்பொடிகள்!

உணவைக் கொடுத்து வாக்காளப் பெருமக்களே என ஓட்டு கேட்கவும் மறக்கவில்லை.



நடிகர்களும் உதவிப் போர்வையில்
மீண்டும் விளம்பரம் தேடவே போஸ்டரும் கையுமாக உலா வருகிறார்கள்.



இந்த மழையை மையமா வச்சு
நாலஞ்சு சினிமா எடுப்பானுக கோடம்பாக்க கிறுக்கனுக.



 



இதற்கிடையில்,



கரண்ட் இல்ல, வீடு இல்ல,
சாப்பாடு இல்ல, தண்ணி மட்டும் ரொம்ப இருக்கு குடிக்க முடில.



பாலம் உடையுது, ரோடு
குழியாகுது, மரம் முறிகிறது, தண்ணில கால் வைத்தால் கரண்ட் அடிக்குது,



நெட்வோர்க் இல்ல..போன்
போகல..எதும் மெசேஜ் அப்பா அம்மாட்ட இருந்து வந்துச்சா தெரியல. நரகத்தின் மாதிரிகள்
நகரமென புரிய வைத்தது மழை.



கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,
முதியவர்கள் முகத்தில் பரிதவிப்புகள்.



தெரு நாய்கள் உணவு இருக்க
இடமின்றி தவித்து அலைகின்றன



சந்து பொந்துல இருந்த
பாம்பு, தவளையெல்லாம் வெளிய வந்தாச்சு!!



மழை பெய்யலைன்னாலும்
புலம்புவோம். மழை பெய்ஞ்சாலும் புலம்புவோம்.



சென்னைக்கு ஒன்னும் ஆகாது, துப்புரவுபணியாளர்கள்
பஸ்ஓட்டுநர்கள்
தீயணைப்புவீரர்கள்
உதவிகுழுக்கள்
சமூகசேவை
 இருக்கும்வரை



சென்னை மாநகராட்சி துப்புரவு
ஊழியர்கள் கடவுளாக இருக்கும்போது, வெளியூர் சொந்தங்கள் சென்னை மக்களை நினைத்து வருந்த
வேண்டாம். உயிரைக் கொடுத்து உதவ ஓடி வருகிறார்கள்.



 வீட்டிற்குச்
செல்லாமல் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் இருப்பதால் கொஞ்சம் தைரியம் பிறக்கிறது.



சென்னையின் பலமுகங்களில்
இந்த முகம் கோரமானது. நேரில் பார்த்து அனுபவித்து தத்தளிதுவிட்டேன் என்பதால் என்னவோ புதுமையாக உணர
மனம் வரவில்லை. எங்கோ இருந்துகொண்டு, செய்திகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ’உச்’ கொட்டும்
நீங்கள் இருக்கும்வரை யாருக்கும் ஒன்று ஆகாது.

முடிந்தவரை உதவுவோம். சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும்

என்னதான் இருந்தாலும் சென்னை விட்டுச் செல்ல மனமில்லை.



இந்தமுறை மழை தன் இருப்பை
மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் தெரு தெருவாகப் பதிந்துவிட்டுச் செல்லும். பள்ளிகளுக்கு லீவு விட்டு, மக்களுக்கு பாடம் எடுக்கிறது மழை. படித்துக்கொள்வோம்.



பதிவு : மனோ ரெட்
நாள் : 2-Dec-15, 1:02 pm

மேலே