போதும் போதும் இயற்கைத் தாயே...! விடாது மழைப் பெய்து...
போதும் போதும்
இயற்கைத் தாயே...!
விடாது மழைப் பெய்து
தவறாது நீ கண்டிப்பது
புரிகிறது தாயே! -உனை
வணங்காது விட்ட பெரும்பிழையை
உணர்கிறோம் நீ கொட்டும் பெரும் மழையை..!
மன்னித்து அருள்வாயாக..
அறிந்தே தவறு செய்துவிட்டோம்
மன்னித்து விடு..!
வஞ்சிக்கும் உன்
மழைத் தண்டனையை
தயவுச் செய்து விட்டுவிடு..
திருந்திவிடுகிறோம்...
ஏரி,குளங்களை மீட்டெடுத்து
திருத்தி அமைக்கிறோம்.
போதும் போதும்
எங்களை மன்னித்து விட்டுவிடு...!
பொது மன்னிப்பாய் எங்கள்
பொது மக்களுக்கு ஒரு
கருணைக் காட்டு தாயே..!
- குரங்கு குட்டி..
(அலைப்பாயும் மனமுடைய ஒரே விலங்கினம்...மனிதன்)