வந்துவிடு அர்ஷத்

விழிமேக தூரலில் - உயிர்
பயிரும் பிழைக்குமா
கசியும் நிமிடம் - நீ
வந்தால் கசங்குமா
மையல் கொண்ட மனது-மரபு
வேலியை உடைக்குமா
புழுங்கி கிடக்கும் உயிர் - வேறு
காதல் புனையுமா
உலா வந்த விரல்கள் - வேறு
தேசம் தேடுமா
உன்னை நனைத்த - என்னிதழ்
மழை பிற நிலத்தை நனைக்குமா ...

எழுதியவர் : அர்ஷத் (2-Dec-15, 2:48 pm)
பார்வை : 130

மேலே