பசிக்காக கல் சுமப்பவர்கள்-ஆனந்தி
மனம் முழுவதிலும் ஏக்கம்
கன்னங்கள் இரண்டிலும் ஏழை
என்பதின் தாக்கம்........
நெடுந்துயர் கட்டிடம்
இவர்களை சுற்றிலும்.
அண்ட மட்டும் வழி இல்லை.....
சிந்தைக்குள் நித்தம் நித்தம்
பெருமூச்சு......
நமக்கும் ஓர் நாள்
விடியாதா....என்று
ஏக்கத்தோடே....
தினம் தினம் அறு நூறு
சுவை
கொத்தன் இவர்களிடம்
பேசும் பேச்சினில் மட்டும்....
அடுக்கும் கல் அனைத்தும்
இவர்களது கல்லறையா(ய்) ....
தலை சுமையை இறக்கி
விடலாம்.
உள்ளத்து உணர்வுகளை.......
நெருக்கடியில்
இரைப்பைக்கு
இரப்பையே உணவாகி
பெருந்துயர் கண்டிடும்
இவர்களின் நிலை தான்
என்னவோ....
யார் தான் பொறுப்போ.....
என்று மாறும் இந்நிலை
நெஞ்சத்தை வதைக்கிறது.
அவர்களின் அடையாளம்
அன்னியப்பட்டு கிடப்பதினில்....