நீ

சிற்பியானேன் !
செதுக்கும் சிலையெல்லாம்
நீயானாய்...

ஓவியனானேன் !
தீட்டும் ஓவியமெல்லாம்
நீயானாய்....

பக்தனானேன் !
வழிபடும் தெய்வமெல்லாம்
நீயானாய்....

பாதசாரியானேன் !
திரும்பும் திசையெல்லாம்
நீயானாய்....

வானமானேன் !
தொட்டு தவழும் மேகமெல்லாம்
நீயானாய்....

தமிழானேன் !
இயற்றும் கவியெல்லாம்
நீயானாய்....

கடலானேன் !
அதிலுறங்கும் முத்தெல்லாம்
நீயானாய்....

நான் என்னவாய் ஆனால் !
நீ மொத்தமாய் எனதாகுவாய்...
சொல்லடி என்காதல்
கண்மணி !!! - என்றேன்

கண்சிமிட்டிக்கொண்டே!!
என் காதருகே கடித்தாய் ....
நீ என் கணவனானால் என்று...
அழகியடி நீ.....!!!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (16-Sep-15, 3:38 pm)
Tanglish : nee
பார்வை : 220

மேலே