அன்னை உன்றன் ஆசி வேண்டும் --- எஞ்ஞான்றும் ------- வெளி விருத்தம்

அன்பின் நீயே ஆளும் சக்தி --- எஞ்ஞான்றும்
உன்னைக் கண்டு உள்ளம் சேரும் -- எஞ்ஞான்றும்
கண்முன் நின்று காவியம் படைப்பாய் --- எஞ்ஞான்றும்
பெண்ணே நீதான் பெருமை கொள்வாய் --- எஞ்ஞான்றும் .

என்னுள் நீயே என்ற உணர்வு --- எஞ்ஞான்றும்
அன்னை உன்றன் ஆசி வேண்டும் --- எஞ்ஞான்றும்
சொந்தம் பந்தம் சோகம் தீர்ப்பாய் --- எஞ்ஞான்றும்
வந்த துன்பம் வாட்டம் தராது ---- எஞ்ஞான்றும் .


குழந்தை என்னை குன்றா வளர்த்தாய் --- எஞ்ஞான்றும்
முழுதாய் என்னை முதலாய் கொண்டாய் ---எஞ்ஞான்றும்
மீண்டும் மீண்டும் மீளா தெய்வம் ---எஞ்ஞான்றும்
யாண்டும் யாண்டும் ஞானம் வேண்டும் --- எஞ்ஞான்றும்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Sep-15, 12:46 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 121

மேலே