அம்மா பேசும் தெய்வம்

அம்மாஅம்மாஅம்மா!
என் பேசும் தெய்வம்
அம்மாஅம்மாஅம்மா!

அப்பா என்று நீ
அன்போடு அழைக்கையில்
உருகி நிற்கிறேன்!

உன் அரவணைப்பில்
என்றும் நான்
குழந்தையாகிறேன்!

அருள் பொழியும்
பார்வையில் நான்
பரவசமாகிறேன்!

இசைபட வாழ்கவென
வாழ்த்தி ஓதுவித்தாய் வாழ்வில்
ஏற்றம் பெறுகிறேன்!

ஈதல் அறமென
இசைவித்தாய் நாளும்
இன்முகம் காண விழைகிறேன்!

உன்அன்பை
நினைத்துப் பார்க்கையிலே
நினைவை இழக்கிறேன்.!

உன் பிரிவை
என்றீ நானும்
கலங்கி நிற்கிறேன்!

எப்பிறப்பும்
அன்னையாகி என்னை
ஈன்றெடுக்கப் பணிந்து நிற்கிறேன்.!

கருணை நிறைந்த
இறைவனை நான்
இறைஞ்சி நிற்கிறேன்!

கரவாமல்
வரமளிக்க நானும்
அவனைப் போற்றி துதிக்கிறேன்.!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (17-Sep-15, 3:29 pm)
Tanglish : amma pesum theivam
பார்வை : 109

மேலே