காதல் என்பது - 2

காதல் என்பது ...
கடிகாரத்தில் சின்ன முள் பின்னால் பெரிய முள்ளாய் சுற்றி சுற்றி வருவது.

காதல் என்பது....
காதலியுடன் மோட்டார் சைக்கிளில் செல்கையில் வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறுவது.

காதல் என்பது....
பிளாட்பாரத்தில் நின்று லேட்டாய் வரும் ட்ரைனுக்காக வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு மனம் இறுகிப்போவது.

காதல் என்பது....
கீழே கிடக்கும் கல்லெடுத்து கண்ணுக்கு புலப்படாத இலக்கை நோக்கி எறிந்து விட்டு கண் இமைக்காமல் காணத்துடிப்பது.

காதல் என்பது...
தப்பெல்லாம் செய்துவிட்டு தண்டனைக்கு தப்பி வந்து விட்டபின் பார்ப்பவரை எல்லாம் போலீஷ்காரராய் நினைத்து கொள்வது.


(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (18-Sep-15, 2:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 84

மேலே