இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது

கொ.பா.சே. :: தலைவா ஏ இன்னும் தண்ணிய அந்த மாநிலத்துக்கு திறந்து விட முடியாதுன்னு சொல்றீங்க .. அவங்க சும்மா தொன தொனனு மேலிடத்துக்கு கடுதாசி போடுரானுவுக...

தலைவர் :: அட நீ எங்கட கிறுக்கு பயலா இருக்கே... நமக்கு நாளுக்கு நாள் கழிவு நீர் தேங்கறது ராக்கெட் மாதிரி ஜிவ்வுன்னு ஏறிட்டே போகுது, அத எங்க பொய் கொட்டறது.. இதோ இந்த இனாமா கொடுக்குற தண்ணில தானே கலந்துவிட்டுட்டு இருக்கோம்..

கொ.பா.சே.:: அது சரி தலைவரே அத இப்போவே விட்டுடலாம் இல்ல... ஏன் லேட் பண்ணறீங்க..

தலைவர்: டேய் நாதறித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனும் டா..
கேட்டவுடனே கொடுத்துட்டா இதுல 50% தண்ணி இல்ல கலப்படமா இருக்கு.. அது இருக்கு இது இருக்குனு சொல்லுவாங்க.. கொஞ்சம் கதறட்டும் அப்போ தான் அடக்கி வாசிப்பாங்க..

கொ.ப.சே. :: தலைவா பின்னிடீங்க போங்க...

தலைவர் : சரி சரி அடுத்த மாசம் தண்ணி 20% அது 80% னு கலந்து விட்டு தொறந்து விடுங்கடா.. அப்பறம் வரட்சிய கூட பொருட்படுத்தாம அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கப்படதுன்னு அறிக்கை விட்டு மத்தியில சொல்லி மானியம் வாங்கிக்கலாம் ரிப்போர்ட் ரெடி பணிடுங்க...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (18-Sep-15, 2:43 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே