தோற்றுப் பழகு
தோற்றுப் பழகு மனிதா !
தோல்வியில்லா வெற்றி நிலைக்காது
தோல்விக்குப்பின் வெற்றி வழுக்காது
முப்பத்திரண்டு முறை போர் புரிந்து
வெற்றி பெற்றவனை பேசும் நாம்
முப்பத்தொரு முறை வெற்றி பெற்று
கடைசி ஒரு முறை தோற்றவனைப் பற்றி
பேசுவதில்லை
ஆகவே
தோற்றுப் பழகு மனிதா !
சரித்திரம் படைக்க !!
- லாரிஷ்