சாமண்ணா

சாமண்ணா என்று ஒரு பிராமண நண்பர்.. பல வருடங்களுக்கு முன் அவருடன் அந்தமானுக்கு கப்பலில் செல்ல நேர்ந்தது... அது என் முதல் கப்பல் பயணம் என்பதால் இரண்டு நாட்கள் ஒரே வாந்தி.. எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி...

நாங்கள் பயணித்தது நால்வர் கொண்ட கேபின்... என் துணிகளை எல்லாம் வாந்தி எடுத்த இடங்களை எல்லாம் அவரே சுத்தப்படுத்துவார்.. மிகவும் உதவியாக இருந்து கவனித்தார்... எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்... அப்போது அவர் சொன்ன செய்தி இன்னும் பசுமையாக இருக்கிறது...

“சார்.. நீங்கள் பெரியார் பற்றி உயர்வாகப் பேசுகிறீர்கள்.. அவர் உண்மையிலேயே மிகப் பெரிய சீர்திருத்தவாதி... அதை நான் எங்க ஜனங்களுக்குப் பயந்து வெளிப்படையாக சொல்ல முடியாது.... சுமார் 60 வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் - பால்ய விவாகம் செய்தவள் விதவையாகி விட்டாள்..
அவளை மொட்டை அடித்து முக்காடு போடச் சொல்லி மூலையில் உட்கார வைத்து விட்டனர்.

எந்த நல்லது கெட்டது எதற்கும் அவள் போகக் கூடாது. வாசற் படியைத் தாண்டக் கூடாது.. எதிரே வரக் கூடாது... சிரிக்கக் கூடாது... அதை விடக் கொடுமை - வெள்ளை பூசணிக்காயை சுட வைத்துக் கொடுத்து பல்லில் கடிக்கச் சொல்லி கொடுத்து எல்லாப் பற்களையும் விழச் செய்து விட்டார்கள்... இது கற்பனை இல்லை .. நான் கண்ட உண்மை... பெரியார் பெண்ணடிமையை எதிர்த்து குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகுதான் - போராடிய பிறகுதான் இப்படிப்பட்ட கொடூரங்கள் மறைந்தன...

பெரியாரை நான் மறப்பது கிடையாது...“ என்று அவர் வெளிப்படையாகச் சொன்னார்....

என் இமைகள் நனைந்த அரிதான நாட்களில் - அந்த நாளும் ஒன்று...

எழுதியவர் : முகநூலில் சொல்கேளான் ஏ.வி. (18-Sep-15, 3:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 92

மேலே