காதலே நீ வந்துவிடு
காதலே நீ வந்துவிடு
**********************************************
காதலே நீ வந்துவிடு காதலிக்க இவனுண்டு .
ஆதலால் ஒரு பெண்ணை அரங்கத்தில் ஏற்றிவிடு .
போதிமர நிழல்தன்னில் வாதித்தே நிற்காது ,
ஓதக் கடலோரம் உட்கார்ந்து அகமகிழ
காதலிக்க அவளிருக்க பேதமில்லை இவனுக்கும் .
மோதலும் சாதலும் நெருங்கிவிட இயலாது ,
முதுபெரும் இருவீட்டார் ஆசியுடன் இல்லறமும்,
சூதுவழி இயங்காது போகவழி தொடர்ந்துவிட,
இதுகாறும் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடவே
காதலே நீ வந்துவிடு காதலிக்கும் பெண்ணுடனே !!