பசி
ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப்
பசியோடு போகும் நாங்களும்
நிஜமாகவே கடவுளின் பிள்ளைகள்
தானா?
நீங்கள் ஊற்றும் பால் உங்களுக்கு ஒரு போதும்
வலியைத் தராது ஆனால் எங்களுக்கு மரண
வலியைத் தரும் என்பதை ஒரு போதும்
மறந்து விடாதீர்கள்..!
பசிக்காக. இறந்த தாயின் மார்பில்
பால் குடித்தவர்கள்.நாங்களே!.
பாலுக்காக அழுகின்ற நாங்கள்.
இருக்கும் வரை
நீங்கள் படைக்கும் எந்த பாலும்
ஜீரணிக்காது இறைவனுக்கு.
பற்றி எரியும் வயிறுடன் பசியென்று
வாய்திறக்க முடியாமல் துடித்த
இரவுகள் உண்டு.
அந்த இரவுகள் மட்டும் .எங்களின்
உயிரின் ஆயுள் சற்று நீளுமே
பசியை மறந்து உறங்கும்வரை.
ஊற்ருங்கள். ஊட்டுங்கள்.
இல்லாதவர்கள் எங்களுக்கும்
பாதியை ஊற்ருங்கள்.
மரணத்தில் இருந்து
பிழைத்துக் கொள்ளவே.!