தற்கொலை திட்டம்
காண சளைத்திராது கண்கள் எனக்கான சம்மதங்கள்
ஆச்சர்ய இமைகள் தெரிவிக்கையில்..
களவாட பிறந்த உன் விழிகள்
என் பேச்சினை மட்டும் வழிப்பறி செய்கின்றன...
இதழது இதழ்தானா... எழுந்தது கேள்வி...
தேனீ இதழோரம் ரீங்காரமிட்டதால்...
உன் நாசிப்பட்டு காணாமல் போனேன்...
இரக்கமிருந்தால் கொஞ்சம் கருனை காட்டு
நான் நரன்தான் சிவனல்ல... சிந்தித்து செயல்படு...
இனி தொடர்ந்தால் கன்னக்குழியில் குதித்து தற்கொலை செய்ய திட்டம்..
வெள்ளை கொடி என்னிடம் இல்லை....
சிவந்த இதயம் ஒன்று நீட்டுகிறேன் நிறுத்திவிடு....