அன்று வித்தியாஇன்று சேயா

விளையாப்பயிரை
முளையில் கிள்ளி எறிந்த
காமநோய் தொற்றிகளே!
அறியா இளம் துளிரை
வெறியோடு மேய்ந்த
காட்டெருமைக் கூட்டங்களே!

போதையுண்டு
பேதை மேல் பாய்ந்த நீச்சர்களே !

பால்மனம்மாறாத பச்சிளங்குழந்தை
எச்சிப்படுத்திய எந்திரகாரர்களே

முள்ளி வாய்க்காலில் பரவிய குருதியை
அள்ளிப்பருகிய மூடோரின் இனத்தோனே!

உங்கள் மனையில் பிஞ்சுகள்
மிச்சமேதும் இருக்கிறதா ?

மனிதனை மனிதனாய் மதித்ததினாலே
மதி கேட்டோரின் இன அழிப்பில்
தமிழினமே அழிந்தது
இல்லையெனில்
பெருப்பான்மை இனம் பெரிதாய் அழிந்திருக்கும்
பேச நாதியின்றி நாடு நாடாய் அலைந்திருக்கும்

துளிரை துன்பியல் செய்து கொண்டோரை
களிறு கொண்டு மிதித்துக்
கொல்ல வேண்டுமென்பதற்காக
எழுந்தது என் பேனா

குற்றவாளிகள் குறையும் வரை
அன்று வித்தியா இன்று சேயா என தொடரும்
பாலியல் கொலை

பலியான பாலகிகளுக்கு
பலன் கிடைக்க நாளாகிப்போகுமா ?
கையாலாகாத்தனமாகுமா ?
என்ற வினாவுடன் இருப்பதினாலே
ஈனப்பிறவிகளின்,ஈனச்செயல் நீளும்...
நல்லாட்சி என்ன செய்யப்போகுதென்று
பொறுத்திருப்போம்.

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (19-Sep-15, 9:09 pm)
பார்வை : 97

மேலே