உலக சுதந்திரம்

என்று
சாதியம்,மதம்,இனம்,பேதம்,
என்பவன நீங்கி
மனிதம் என்ற உணர்வு
எட்டுகிறதோ
அன்று உலகம்
சுதந்திரம் காணும்

நாடுகளில் அமைதி
என்றுரைப்பதை விட
அமைதிகள் நாடுகளாகி
கவலையின்மை ஒவ்வொருவரின்
வீடுகளாகி
மகிழ்ச்சிகள் காடுகளாகி
இந்த வரலாறும் ஏடுகளாகும்
மக்கள் மனதில்

பொறாமை,கோவம்,
தீய செயல்,கொச்சைச் சொல்
இதை எல்லாம் துறந்து
வெள்ளைத் துணியில்
மீண்டும் சுற்றிகொள்வோம்
மண் தொட்ட சேயாக
மீண்டும் பிறக்கட்டும்
பரிணாமம்

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (21-Sep-15, 7:34 am)
Tanglish : ulaga suthanthiram
பார்வை : 100

மேலே