மெய் வருத்தம்
ஏச்சி பொழைக்கும் எஜமானிகளே
ஏழை வர்கம் உங்கள் நிஜகூலிகளே
அடிமைதனத்தை அதிகாரத்தில் காட்டும்
கயமைதனத்தை நரபலி கொடுங்களேன்”
ஒவ்வொரு வாழ்வுக்கும் வரலாறுண்டு
வரலாறு சொன்னால் வீண் தகராறுண்டு
பதினாறும் பெற்று வாழ்வோரை கண்டு
வயிறு எரிபவர்கள் பலபேர் உண்டு
அர்த்தம் செறிந்த வாழ்க்கை வாழ
ஒவ்வொரு மனிதனும் முயலுனும்
அடிமை தனத்தின் ஆணி வேரறுக்க
புரட்சியாளர்களின் புத்தகம் படிக்கனும்
ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம்
என்று வாழ்ந்து மடிவது மடத்தனம்
சாதிக்கப் பிறந்து சாதியை மறந்து
என்றும் உழைப்பது உலகில் உத்தமம்
உத்தமனாய் வாழ்வதற்கு சமூகத்தில்
சத்தியமாய் எவனாலும் முடியாது
எத்தர் வேலை செய்பவர்க்கே சமூகம்
இரத்தின கம்பளம் விரிக்கின்றது
மரியாதையின் மகத்துவத்தை பணப்-
-பைதான் நிர்ணயிக்கிறது; பணக்காரன்
வந்துவிட்டால் வாயெல்லாம் பல்லாய்
வாசல்வரை சென்று வரவேற்கிறது
கூழை கும்பிடு போட்டு போட்டே
ஊழல் புரிவதில் உலக சாதனை
காவல்துறை சற்று ஏமாந்தால்
புழல் சிறையிலும் ஊழல் போதனை
நாட்டுக்காக உழைப்பனுக்கு எதற்கு
அய்ந்தடுக்கு பாதுகாப்பு ? அவன் வீட்டு
நாய் குட்டிக்கும் அலங்கார பராமறிப்பு!
பராவயில்லை இருக்கட்டும்; நாயின்
சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள்,
ஏழையின் வயிற்றில் நெருப்பை கட்டிவிட்டு.