எழுத்து டாட் காம்

**************************
எழுத்துக்கள்
இணைந்துதான்
கவிதையாகும்..!
எழுத்துக்குள் இணைந்தாளே
கவிஞனாவாய்.!
***************************
கிட்டப்பார்வைக்கு
குழி ஆடி.!
எட்டப்பார்வைக்கு
குவி ஆடி.!
எழுத்து தெரிந்தபின்
கவி பாடி.!
****************************
எழுத்து அழகாக வேண்டும் என்றால்
எழுதி எழுதிப் பழகு.!
எழுதிப் பழக வேண்டும் என்றால்
எழுத்தோடு பழகு.!
*****************************
நேற்று எத்தனையோ பேர் எழுதி
இருக்களாம்.!
நாளை எத்தனையோ பேர்
எழுத வரலாம்
எழுத்து மட்டும் மாறாதது.!
******************************
உயிர் எழுத்தா
மெய் எழுத்தா
ஆயுத எழுத்தா என்றால்..
ஆயுதம் இன்றி
மெய் காக்க போராடும்
எங்கள் உயிர் எழுத்து.!
*******************************
எழுத்தாளன் இன்றிக்கூட
எழுத்து இருக்கும்.!
எழுத்து இன்றி
எழுத்தாளன் இல்லை.!
*******************************
பல பேனாக்கள் சங்கமிக்கும்
ஒரு எழுத்து இது.!
பல எழுத்துக்களை சிந்தவைக்கும்
ஒரு பேனா இது.!
*******************************
நான் உடன்படாத ஒரு தமிழ்ச்சொல்
எழுத்துப்பிழை மட்டும்தான்.!
ஏனெனில் எழுத்து "பிழைஆவதில்லை
எப்போதும்.!
*******************************
எழுத்தை எழுத
கற்றுக்கொடுத்தாள் அம்மா.!
அம்மாவை எழுத
கற்றுக்கொடுத்தது எழுத்து.!
**********************************
இது வெறும் எழுத்தல்ல.!
எங்கள் தலைஎழுத்து.!
*******************************

எழுதியவர் : நிலாகண்ணன் (21-Sep-15, 10:16 am)
Tanglish : eluthu dot kaaum
பார்வை : 186

மேலே