கல்லறையை நோக்கி -முஹம்மத் ஸர்பான்

சருகுகளில்லாத ஆலமரயோரத்திலே
நிழலுக்காக ஒதுங்கும் என் சமுதாயமே!
பழமை உதிர்ந்து நவீனம் மலர்ந்து
ஆண் பெண் நேசம் இன்று
படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.
கரைகடந்த வெள்ளைக்காரன் கலாச்சாரம்
மண்ணில் தீவினையாக பரவுகிறது,
முதலெழுத்துக்கள் பார்க்கும் கண்ணம்
நிர்வாணக் கோளத்தை ரசிக்கிறது.
உதிர உறவைக்கூட நம்பமுடியாத
துர்ப்பாக்கியம் இந்த மண்ணில்.....,
காமனாய்களின் மோப்பம் வளர்கிறது.
உரிமைகள் துஷ்பிரயோகமாகிறது.
அகிலத்தில் பாவக்கறைகள் நதியாக பாய்கிறது,
பெண்ணின் கற்பு விளையாட்டு பொருளானது,
தர்ம தேவதை கண்கள் குருடானது,
இந்தவுலகமே கல்லறை மயானமாகப் போகிறது.