சமுதாயம்
கருவுற்ற பொழுதே என்னை
கொன்று விட முயன்ற
என் தந்தையை;
வயிறும் பசியும் மட்டும்
தந்து பொருளை தராத
என் தெய்வத்தை;
பெற்றவளை பொற்ற என்னை
விற்க கூறிய
என் சமுதாயத்தை;
சொந்த உடலில் உரிமையின்றி
வந்து நோயை தந்த
என் இயற்கையை;
திரும்பி பார்த்தேன்
" நான் பழி உற்றவள்
அவர்கள் புகழ் பெற்றவர் "