கோமாளிகள்

உடலாய் உறுப்பாய் உயிரே உன்னதம்
மனதார மகிழும் அன்பே அற்புதம்!
சரியும் தப்பும் சந்தர்ப்ப வாதம்
சரி எனும் சமாதானமே சந்தோச பிறப்பிடம்!
ஆசையின் அளவே அகங் கொல்லும் துர்குணம்
அடங்காத மன அசிங்கங்கள்ளின் உறைவிடம்!
பிணம் வரை பணம் தேடும்
காலியான போலிகள்!
கோமகனாய் வாழ நினைத்து
நிஜ வாழ்வு தொலைத்த கோமாளிகள்!!!!
பொழுதின் போக்காய் கழியும் காலம்
போனால் வராத வசந்தகளின் ராகம்!