பழைய நினைவு
பழையதாகிக் கொண்டிருக்கும் நினைவுகள்......
காலத்தை கிழித்துச் செல்கிறது
சிரிப்பின் சத்தம் .......
வலிகள் மட்டுமே அதிகம்
கிடைத்ததாக ஓர் எண்ணம் ........
புழுதி தட்டிப் பார்க்க
வேண்டியதாக இருக்கிறது
ஒவ்வொரு அர்த்தமுள்ள நொடிகளை...
எழுகிறேன்...
விழித்த பாடில்லை
திரும்பவும் விழுகிறேன்...
காசா??
பணமா??
நினைவுகள் பிடித்திருக்கிறது ...
நினைத்து கொண்டே இருக்கலாம் ....
எதையும் நினைக்காமல்....