வெண்பாக்கள் சில
ஆசானே உம்மை அனுதினமும் போற்றினால்
கூசாமல் என்றுமே கூடிவிடும் நன்னெறிகள்
வீசுகின்ற தென்றல் விரும்பப் படுவதுபோல்
பாசமுடன் வாழ்த்திடும் பார்.
கருவறையில் என்னைக் கவனமாய் அன்னை
அருமையுடன் தாங்கிய அந்தப் - பெருமையுடன்
கற்பிக்கும் உன்றன் கவலைகளை யானறிந்து
நிற்கின்றேன் என்றும் நினைத்து.
முத்தமிழும் எங்கட்கு முக்கனியைப் போலவே
எத்திசையில் கேட்டாலும் இன்பமாய்த்-- தித்திக்கும்
உள்ளுசுவை இன்பம் உணரச் சுவைதரும்
தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேன்.