ஏழாவது மனிதன் 3

அவன் உழைத்ததை
தின்று,
அவன் நெய்ததை
உடுத்தி,
அவன் செய்ததை
அணிந்து,
அவன் திருத்தியதில்
அழகாகி,
அவன் பெருக்கியதில்
வாசலாகி,
அவன் கட்டியதில்
வாழ்ந்து
செத்துப் போன
காலம் முழுக்க
சாதி சுமந்த
பெரியவரை
கடைசியிலும்
அவன் தான்
எரித்தான்....
கவிஜி