ஆகாயம் தொட்டது போல்
தெளிவான அன்பில்
மிதந்து வரும் ஆசை
உனில் அன்றோ, உனதன்றோ
துள்ளுகின்ற மீனாக
துவண்டு வரும் கொடியாக உன்னை
அள்ளித்தான் அணைத்திட
சொக்கித்தான் போகின்றாள் உன் அன்னை ,
அன்னையான அவள் மனமே
உன்னைப் பார்த்து நெகிழ்ச்சி கொண்டால்
ஆராரோ சொல்லித்தான் யார் யாரோ ஏங்குவதும்
ஆசை கொண்ட உற்றங்களும் சுற்றங்களும்
அவசர அவசரமாய் காத்திருக்க முடியாமல்
தவிக்கின்ற சுகமும் உண்டே
அதைப் பார்த்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
மலைக்கின்றாள் அன்னையவள்
எந்தனுக்கு உனைத் தந்த இறைவனுக்கு
எத்தனை முறை சொன்னாலும் நன்றி
போதாது போதாது போதாது எனக் கூறித்
துதிக்கின்றாள் இறைவனை
மின்னி வரும் உன் சிரிப்பில்
தவழுகின்ற ஒளிக் கீற்றில்
ஈர்க்குதையா எங்களைத்தான் ,
மின்னுகின்றோம் உன் ஒளியில்
மலருகின்ற மொட்டுக்களாய் ,
மின் சிரிப்பால், உன் அழகில்
ஆகாயம் தொட்டது போல்
மனம் எல்லாம் இலேசாக இருக்குதன்றோ ,
உன் வரவால் உலகமதைக்
கைக்குள்ளே அடக்கி விட்டோம்
என்கின்ற பெரும் எண்ணமும் பேரின்பமும்
எங்களைக் குதூகலத்தில் ஆழ்துகின்றதே
தெய்வம் தான் இறங்கி வந்து உன் வடிவில்
தோன்றியதோ என்றுதான் மகிழ்ன்றோம்
உன்னைப் பெற்றாலும் பெற்றாள்
பெருமை மிகும் தாய் அவளே